மட்டக்களப்பில் மீண்டும் மினி சூறாவளி
(ச.சுரேந்திக்கா)
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் சில இடங்களில் மினி சூறாவளி இலேசாக தாக்கியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தம் மழை பெய்துவரும் நிலையில் இன்று காலை மகிழூர்முனை, குறுமன்வெளி மற்றும் செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோப்பாவெளி போன்ற கிராமங்களில் மினி சூறாவளி தாக்கியுள்ளதாக அறியமுடிகின்றது.இத் தாக்கத்தின் சேதவிபரங்கள் பற்றிய தகவல்கள் உத்தியோகபூர்வமாக கிடைக்கப்பெறவில்லை.
(ச.சுரேந்திக்கா)இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் சில இடங்களில் மினி சூறாவளி இலேசாக தாக்கியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தம் மழை பெய்துவரும் நிலையில் இன்று காலை மகிழூர்முனை, குறுமன்வெளி மற்றும் செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோப்பாவெளி போன்ற கிராமங்களில் மினி சூறாவளி தாக்கியுள்ளதாக அறியமுடிகின்றது.இத் தாக்கத்தின் சேதவிபரங்கள் பற்றிய தகவல்கள் உத்தியோகபூர்வமாக கிடைக்கப்பெறவில்லை.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையேரப் பிரதேசங்களில்குறிப்பாக மட்டக்களப்பு முகத்துவாரம்,நாவலடி, வாகரை கரையோரப்பகுதி,கல்குடா கரையோரப் பகுதி போன்ற இடங்களில் இன்று பகல் அதிக காற்று வீசிக்கொண்டிருப்பதாகவும் அறியமுடிகின்றது.
இதேவேளை நேற்று கல்லடி,நொச்சிமுனை பகுதியில் வீசிய மினி சூறாவளியினால் 12 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.